Monday, September 19, 2016

காவிரி என்பது நதி அல்ல:உணர்ச்சிப்பெருக்கு

ஆம் காவிரி ஒரு உணர்ச்சிப்பெருக்காக உருவாக்கப்பட்டுவிட்டது.


பரந்து விரிந்த துணைக்கண்டத்தை ஆட்சி செய்வதில் பெரும் குளறுபடிகள் இருந்து வந்துள்ளதை நம்முடைய 60 ஆண்டு கால அரசியலை கண்டாலே புலப்படும்.ஏகப்பட்ட மொழிகள் எக்கச்சக்க கலாச்சார மாறுபாடுகள் , இதெயெல்லாம் சமாளிக்க ஒரே வழி மொழி வாரி மாநிலங்கள் என்று அன்றைய இந்திய அரசு முடிவு செய்து பொறுப்பை இரும்பு மனிதரின் கையில் ஒப்படைத்தது.சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவை கட்டமைக்க/நிர்வகிக்க/எளிதாக ஆட்சி செய்ய மொழிவாரியாக நிலங்கள் பிரிக்கப்பட்டன. ஏனோ பிரித்தாளும் கொள்கை ஆங்கிலேயர்களுக்கு தான் கச்சிதமாக பொருந்தும் போலிருக்கிறது. அன்றைய ஆங்கிலேய குடியேற்றம் காலூன்ற இங்குள்ள சிற்றரசர்களையும் நிலக்கிழார்களையும் ஒன்றுசேரவிடாமல் கவனமாக பார்த்துக்கொண்டனர்.

அதே தந்திரதோடுதான் தற்போது நம்மை நாமே ஆண்டு கொண்டு இருக்கிறோம். இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான போராட்டங்களுக்கு ஏதேனும் ஒன்று அல்லது ஒருசில அரசியல் கட்சிகளின் சுயநலம் இருக்கும்.









தமிழ்/மலையாளம்/கன்னடம் என்பது மொழியல்ல , காவிரி என்பது நதி அல்ல, இவையெல்லாம் உணர்ச்சிப்பெருக்கு நமக்கு. இதுதான் பிரச்னையின் வேர். இந்த உணர்வுகளை உணர்ச்சிகளாக்கி பற்றவைத்து குளிர் காய்வது அரசியலில் ராஜதந்திரம் எனப்படும்(விக்னேஷ்கள் இருக்கும் வரை சீமான்களுக்கு கொண்டாட்டம் தானே). 1970-90 களில் கிட்டத்தட்ட 3-4 மிகப்பெரிய அணைகளை கர்நாடக அரசு கட்டியெழுப்பிய போது இங்கு மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் திராவிட காட்சிகளே. அப்போது வாய் மூடி மவுனித்துவிட்டு இப்போது ஒருவர்மீதொருவர் குற்றம் சுமத்தி முதலை கண்ணீர் வடிக்கிறார்கள்.புதிதாக அணைகள் திட்டமிடவோ கட்டவோ வக்கில்லாத நமக்கு ஏற்கனவே உள்ள அணைக்கரை(thiruvidaimaruthur taluk in Tanjavur district) போன்ற தடுப்பணைகளை சீர் செய்ய கூட நேரமில்லை.
Mullai Periyar



ஒவ்வொரு வருடமும் பாலாற்றிலும்,பெரியரிலும்,காவிரியிலும் அரசியல் செய்தே பழகிவிட்டோம்.கேரளாவிற்கு முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஒரு பிரச்சினையே அல்ல, இருந்தும் அவர்கள் இடுக்கி வாக்கு வங்கியை குறிபார்க்கிறார்கள், இடுக்கி அணையின் மின்சார உற்பத்தியை பெருக்க விரும்புகின்றனர். பாலாறு அப்படியே தான் ஆந்திராவிற்கு. போதாக்குறைக்கு வேலூர் மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான தோல் தொழிற்சாலைகள் பாழாக்குகிறது  இந்த பாலாற்றை. கர்நாடகத்திலும் தண்ணீர்  அரசியலாக்கப்படுகிறது. மைசூரு மாண்டியா பெங்களூரு உள்ளிட்ட தென் மாவட்டங்களின் தலையாய அரசியல் கருவியே காவிரி நீர் பங்கீடுதான். போதுமான அளவு தண்ணீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீர் திறப்பதில் முந்தய கர்நாடக அரசுகளின் அணுகுமுறை தான் இந்தமுறை அவர்களுக்கு பேரிடியாக அமைந்துவிட்டது.கடந்த ஆண்டை காட்டிலும் பருவமழை குறைவால் கர்நாடக நீர் இருப்பு அதல பாதாளத்தில் உள்ளது.போதாக்குறைக்கு பெங்களூருவின் நீர் தேவை கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துவிட்டது.
KRS dam


காவிரி நீர் பங்கிட்டு குழுவின் ஆணைப்படி ஆண்டு ஒன்றுக்கு 194 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு தரவேண்டும்.இந்த முறை நான்கில் ஒரு பங்கை கூட அவர்கள் தரவில்லை என்பது வேதனையான உண்மை.ஆனாலும் பெங்களூரு பற்றி எரிந்ததன் பின்னணி வெறுப்பு அரசியலும் பொறாமை எண்ணங்களும். இருபக்கமும் பொதுமக்கள் சகோதரத்துவத்துடனே பழக விரும்புகின்றனர். அப்படி செய்துவிட்டால் நாங்க எப்படி அரசியல் செய்வது என்பது கர்நாடக அரசியல் கட்சிகளின் வாதம்.

 நான் ஏன் இதை செய்யவேண்டும் என பொதுமக்கள் சுயமாக சிந்திக்காதவரை பேருந்தை கொளுத்துவதோ, வெறுப்பு அரசியல் செய்வதோ அல்லது தனக்குத்தானே தீயிட்டுக்கொள்ள(ல்ல)ச்செய்வதோ அரசியல் அல்லக்கைகளுக்கு சாதாரணம்..குஜராத்தில் பூகம்பத்திற்கோ,கார்கில் போருக்கோ தாராளமாக உதவும் நாம் கர்நாடகத்திலோ/தமிழகத்திலோ நட்பு பாராட்ட முடியாததன் பின்னணியில் கேடுகெட்ட அரசியல் இருப்பதையுணர வேண்டும்.ஒரே மொழி பேசும் தெலுங்கர்களிடையே கூட ஒற்றுமையின்றி தெலுங்கானா வந்துவிட்டது. அந்த ஒருமைப்பாட்டை இருவேறு மொழிபேசும் இரு மாநில மக்களிடையே எதிர்பார்ப்பது கொஞ்சம் நகைப்புக்குரிய செயல் தானோ என்னவோ.
Kabini Dam


எனக்கு இன்னும் புரியாத புதிராகவே இருப்பது இந்திய
1.உள்துறையின் கொள்கை: மத்திய  நீர் மேலாண்மை வாரியம் அமைத்து அனைத்து நீர்தேக்கங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்ட அறிக்கை தயாரிக்க கூட தோணவில்லை இந்த 69 சுதந்திர ஆண்டுகளில்.எங்களது கல்பாக்கங்களுக்கும் நெய்வேலிகளுக்கும் கட்டளையிடும் முன் பக்கத்துக்கு மாநிலங்களின் கபினிகளுக்கும் KRS-களுக்கும் கட்டளை பிறப்பிக்க சொல்லி தமிழன் கேட்பதில் தவறேதும் இல்லை.

2.வெளியுறவுக்கொள்கை: அவனவன் நாடுபிடிக்க அலையும் போது கச்சத்தீவை இன்னொரு நாட்டிற்கு தாரை வார்ப்பது கேடுகெட்ட அரசியலல்லவோ.அதான் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்ன்னு உலகத்துக்கே தெரியுதே பின்ன என்ன , அடிச்சு புடுங்க வேண்டியதான?


"எண்ணித்துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு.



No comments:

Post a Comment